C-Charity-தயாள குணம் நிறைந்தவராக
H-Hope-நம்பிக்கையின் நட்சத்திரமாக
R-Radiate-பிரகாசமாக ஒளிவீசுகின்றவாராக
I-Innocent-மாசற்றவராக
S-Sacrifice-பாவிகளுக்கு தன் உயிரை தியாகம் செய்தவராக
T-Temple-நம் தேவனை வழிபடும் தேவாலயாமாக
M-Majesty-மாட்சிமையும், கம்பீரமும் பொருந்தியவராக
A-Alpha and Omega-துவக்கமும், முடிவும் இல்லாதவராக
S-Saviour-நம் அணைவரையும் இரட்சிப்பவராக

பிறக்க போகும் தெய்வீக பாலனை நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் வரவேற்போமாக. இ பாலனின் வருகைக்காக சாக்குடுத்தி, சாம்பல் பூசி விரதம் இருந்தது அந்தக்காலம். "உலகம் முழுவதும், விளக்கேற்றி, ஆலயங்கள் அனைத்தும், தன் பங்கிற்கு ஆலய மணிகள் ஆனந்தமாக ஒலிக்கவும் சிறியவரும், பெரியவரும் அக்களிப்போடு வீடு வீடாக சென்று, இன்னிசை கருவிகளோடு தாலாட்டுப் பாடியும் அவரவர் தகுதிக்கேற்ப "சாந்த கிலாஸ்" ஆக மாறி வாழ்த்து மடல், பரிசுகளை வாரி வழங்குகின்றதும், நகை கடைகளிலும், துணி கடைகளிலும் ஏறி, தூய்மையான, புதிய உடையணிந்து வரவேற்பதும், ஒவ்வொரு இல்லங்களிலும் குடில் அமைத்து மாசற்ற பாலகனை அதில் படுக்க வைப்பதும், பிறமதத்தினரை அந்த இனிய நாளில் பங்கு கொள்ள அழைப்பதும், கடுங்குளிரையும், பொருட்படுத்தாமல் நடுநிசியில் பிறக்கப்போகும் பாலனை ஒன்று கூடி வரவேற்பது இந்தகாலம்.

காலங்கள் மாறலாம், கோலங்கள் மாறலாம். ஆனால் நம் நம்பிக்கை மட்டும் மாறாமல், அப்பாலகனின் ஆசீரை பெற்று வளமாக வாழ்த்துவோமாக!

-ஆரோக்கியம்