Prayer for Families
குடும்பங்களுக்கான ஜெபம்
"எமது குடும்பங்களுக்கு இறைவன் தேவை. ஒவ்வருவருக்கும் தேவை. அவரது உதவி, அவரது ஆசீர், அவரது கருணை, அவரது மன்னிப்பு எமக்கு தேவை. இதற்கு எமக்கு தாழ்ச்சி அவசியம். குடும்பமாக செபிக்க நாம் தாழ்மையாக இருக்க வேண்டும்" - திருத்தந்தை பிரான்சிஸ்
எங்கள் அன்பான தந்தையே! அனைத்து குடும்பங்களையும் ஆசீர்வதியும். குடும்பத்திலுள்ள ஒவ்வருவரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதன் மூலம், திருக்குடும்பத்தை போல ஒன்றிணைந்த மனதுடன் வாழச் செய்தருளும் எமது குடும்பங்களில் அன்பும் அமைதியும் ஒருவருக்கொருவர் உதவும் பண்பும் நாள்தோறும் வளர்வதாக!
ஆண்டவரே! எமது குடும்பங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது திருகுடும்பத்தைப் போல, அனைத்து குடும்பங்களையும் பரிசுத்தமாக்கும்.
தந்தையே! எமது குடும்ப வாழ்வில் வரும் அனைத்து இன்ப துன்பங்களையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். நாம் ஒவ்வருவரும், பிறரில் குறைகாண்பதை விடுத்து அவர்களது நிறைகளை கண்டுணரவும், பிறரை தூற்றுவதை விடுத்து அவர்களில் பரிவு கொள்ளவும், பிறரிடமிருந்து பெற்றுக்கொள்வதை விடுத்து பிறருக்கு கொடுக்கவும் வரமருளும். இதன்மூலம் எமது குடும்பம், உமது அன்பும் அமைதியும் ஊற்றெடுக்கும் இடமாக மாற்றப்படட்டும்.
இவையனைத்தையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். ஆமென்!