நமக்கு சுவாசத்தை கொடுத்தவர் மேல் நாம் வைத்துள்ள நம்பிக்கையே விசுவாசம். முன்னோர்கள் காட்டிய வழியில் எம்மை நடத்தியருளும் ஆண்டவரே என்று திருபாடலில் சொல்லபடுகிறது.

நாம் கிறிஸ்துவை, அவரது அன்பை நமக்கு அடையாளம் காட்டி நம்மை இறை வழியில் நடத்தப் பழக்கிய நம் முன்னோர்களுக்கு நன்றி சொல்வோம்.

நாம் ஒவொருவரும் பற்பல திட்டங்கள் தீட்டி அதில் வெற்றி காண்பதும் இவ்விசுவாசத்தினால் தான்.

விசுவாசத்தினால் நீதி மான் பிழைப்பான் என்று நற்செய்தி சொல்கிறது.

அன்று ஆபிரகாம் சந்ததி பெருகும் நிலை தனக்கு செத்துப்போய்விட்டது என்று தெரிந்தும் சாராலுக்கு பிள்ளை பேரு தரும் நிலை இல்லாது போய்விட்டது என்று அறிந்தும் தனக்கு வாக்களித்ததை கடவுள் நிறைவேற்ற வல்லவர் என நம்பினார். கடவுளும் அதை நீதியாகக் கருதி வானத்து நட்சத்திரங்கள் போலவும் கடற்கரை மணல் போலவும் ஒரே ஒரு ஈசாக்கை கொண்டு பெருகச் சய்து ஆபிரகாமை விசோவசத்தின் தந்தையக்கினார்.

நாம் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும் அவருடைய சுத்த கிருபை என்று உணர்வோம்.

ஒரு பேருந்தில் ஏறும் போது டிக்கெட் வாங்கிய இடத்திற்கு டிரைவர் கொண்டு சேர்ப்பார் என நம்புகிறோம்.

தன் சாயலாய் தன ஆவியை ஊதி நம்மை படைத்த கடவுள் நிச்சயம்மாய் நம்மை நிறை வாழ்வில் வழி நடத்துவார் என நம்புவோம். தாயின் கருவில் தாங்கியவர் தலை நரைக்கும் வரை தாங்குவேன், ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன் என இசையாவில் காண்கிறோம்.

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாமே கூடும். விசுவாசிக்கிறவன் தேவனுடைய மகிமையை காண்பான்.

இறைவன் சொன்னது நடக்கும் என்று விசுவசித்த நீ பேரு பெற்றவள் என்று எலிசபெத் மரியாளின் வாழ்த்தை பெற்றாள்.