அன்பின் ஆருயிராய், இரக்கத்தின் தாகம் தீர

மானிட மகனின் அன்பிற்கு வழிகாட்டியாய்,

கண்ணியத்தின் தவ புதல்வியாய்

கருணைக்கு எடுத்துகாட்டாய் ,

புதுமைக்கு தொடக்கமாய்,

சிலுவையின் அடிவாரத்தில்,

உன் அன்பின் கடைசி மூச்சு வரை கண்ணீராய்,

உலகத்தின் சாயலாய் கடவுளிடம் உம் மக்களுக்காக,

பரிந்து பேசி புதுமைகளை வழங்கி,

இன்றும் எங்கள் தேசத்தின் அடிவாரத்தில் வேளாங்கண்ணியாய்,

அலைகடலென திரளும் மக்களுக்கு தாயாய்,

எங்கும் வியாப்பித்திருக்கும் எங்கள் தமிழ்த் தாயே!

இன்று கடல் கடந்து உம்மை நினைத்து எங்கள்

நவ நாட்களை சமர்பித்து, மீட்பரின் உயிர்த்தெழுதல் தேவாலயத்தில்

அருள் நிறைந்தவளின் மகிமையை புது உலகிற்கு பறைசாற்றி

உம் குழந்தையாய் நாங்கள் என்றும் உம் மடியில் தவழ

உம் அருளை பொழிவாய் தாயே!!!
- Remi

கிருபை செய்குவாய் ஆரோக்கிய தாயே

அனைத்துலக நாயகியே!
ஆண்டவனை ஈன்றவளே !
நீர் கொடுத்த இடமும்
நீர் இசைத்த ஆமும் - மனுக்குல
மீட்ப்பினை தந்தது.

ஆதமின் பாவத்தால் வந்த சாபத்தை
விடுதலையக்கியாது உம் பதில்.
கிருபை பெற்றவள் ஆனாய் -யாம்
கிருபை பெற!

உலோகர் முன் பழியினை சுமந்தாய்
யாம் பேருபெற்றவர்களாக!
உள்ளதர்க்கெல்லாம் படபடக்கும் எமக்காய்
உள்ளத்தில் அனைத்தையும் சிந்தித்து வந்தாய்.

எம் விருப்பமே பெரிதாய் எண்ணிய எமகாய்
இறைசித்தமே பெரிது என வாழ்வாக்கினாய்!
கற்பு, தாழ்ச்சி , அணிகலங்கலாக்கினாய்
நாமோ- பட்டுக்கும், பகட்டுக்கும் எங்களை இழந்தோம்.

அம்மா அம்மா கற்றுத்தா அம்மா!
மீண்டுமாய் வாழ்வடைய
உம வழி நல் வழி அவ்வழி யாம் நடக்க
தாயே தயை புரியும்.
Jeyaseeliஆரோக்கிய தாய் நீயே
அலைகடலின் ஓசையில் ஆசையாய் வீற்றிருக்கும் தாயே!
ஆம் என்றதால் அழிவினின்று அகிலத்தை காத்தாய் நீயே!

உம் மகனை எமக்காக தந்ததால்
உலகுக்குகெல்லாம் தாய் ஆனாய் நீயே!

தயங்காமல் தரணிக்காய் தலையாட்டிய தாயே
தாழ்ச்சியாய் வாழ எமக்கு கற்றுத்தந்தாய் நீயே!

நோயுற்று நொறுங்குண்டு நாங்கள் வாடும் போது
எங்களுக்கு நலம் தரும் ஆரோக்கிய தாய் நீயே!
Auxilia Williamஅருள் தரும் அன்னை!
அழைத்தவள் என்னை !
நான் எழுதும் கவிதை!
அவள் தந்த அறிவினில்
வந்த இந்த ஆனந்த கவிதை!

மோர்கார சிறுவனுக்கு முடம்
நீக்கி வாழ்வளித்தாய்!
பால்கார சிறுவனுக்கோ
பக்கம் வந்து காட்சி தந்தாய்!
அலை மோதும் காதல் நடுவே...
அன்றடித்த புயல் அருகே
தத்தளித்த கப்பலயே...
தாங்கி கரை சேர்த்தாயே..

அருளே! பொருளே! அழகே!
அமுதே! நித்தம் உன்னை
பற்றி தொழுதிட என்
மூச்சுகாற்றாய் நீ இரு!
உன் பார்வை ஒன்றே போதும்
எங்கள் அன்னையே!
உந்தன் பாதம் கண்டு
போற்றி எழுதிட
வந்தேன் உன்னையே!
உந்தன் அன்பின் உச்சம்
இல்லயே ! என்றும் எல்லையே!
உந்தன் நெஞ்சம் தந்து!
தஞ்சம் தந்தால்-தீரும்
எங்கள் வாழ்வின் தொல்லயே!

தீராத நோய்களெல்லாம்
உந்தன் பார்வையினால்
தீரும்மம்மா!
வாராத இன்பமெல்லேம்
வந்து என்னை சேருமம்மா!
தாராயோ உன் அருளை!
நான் தஞ்சம்மா
உன் மடியை!
AnthuvanThe most Precious gift god has ever given us is
“U” our very own “ANNAI VELANKANNI”(Mother of Health)!

Flowers are the most divine creation’s we could ever think of
By our Creator, But more precious and more pleasant is only “u”
OUR MOTHER, We love to accept this thoughtfully…

  

Mother u are the most beautiful person any one has ever seen in
this Universe. Our humble love to “u” OUR MOTHER…
Mother your fragrance is sweeter than honey, which it spreads to
The World. You are an apple to god’s own Creation! We bow to “u”
OUR MOTHER…

Mother most holy one! God must have sent you into our life, So that
There would always be love and peace in our hearts… Forever and ever!
Sherene Anthuvanஅள்ளி வழங்கும் அருள்நிலவு அன்னை வேளாங்கண்ணி

திக்கற்று நின்றவளை இக்கட்டில்லிருந்து
விடுவித்து அணைதுக்கொண்டவளே!
என் தாய் என்னை மடி சுமந்து பெற்றாள் - நீயோ
மனதிலும் சிலுவையடியிலும் பெற்றெடுத்தவளே!
பாவத்தின் வலுசர்ப்பம் என்னைத் தீண்டும் போதெல்லாம் -அதை
மிதிக்கச் சொல்லி கற்றுத்தந்தவளே!

உறவுகள் உதறியபோதெல்லாம்
உன் அன்புறவில் அணைத்தவளே!
உன் திருத்தலம் நாடி உன்னை காண வரும்போதெல்லாம்
தாய் வீட்டு சீதனம் தந்து அனுப்புபவளே!
நம்பி வந்த நல்லிந்தவர்களை
நலன்களால் நிறைத்தவளே!
பிறர் முன் குறைபடாமல் நான் வாழ
பரிந்து பேசுபவளே !

பார்ப்போர் வியக்கும் வண்ணம் எமை
பாரினில் உயர்த்துபவளே!
அழுதபடி உன் திருவடி நின்றால்
நிலவையும், வின்மீங்களையுமே தருபவளே!
அலைகடலோரம் அமர்ந்து காவலியாய
பாது காவலியாய் பரமன் வழி அழைப்பவளே!
கிள்ளி தரத் தெரியாதம்மா உனக்கு
அள்ளி வழங்கும் அருள் நிலவம்மா நீ !
Jeyaseeliவேளாங்கண்ணி மாதா சுப்ரபாதம்!

வேளை நகர் நாயகியே போற்றி
கடலலைகளை கண்டித்தவளே போற்றி
போர்த்துகீசியா மாலுமிகைளை,
கரை சேர்த்தவளே போற்றி
பால்கார சிறுவனுக்கு கனிவோடு,
காட்சியளித்தவளே போற்றி
மோர் கார சிறுவனுக்கு கனிவு காட்டிய
ஒப்பற்ற தாயே போற்றி

சிறிய வேளை நகரை தேர்தெடுத்தாயே போற்றி
அணி அணியாய் மக்களை திரள செய்தாயே போற்றி
அறிய அற்புதங்கள் உணர செய்தாயே போற்றி
மன நலனும், உடல் நலனும் நாடி வரும்
சோர்ந்த உள்ளங்களுக்கு
அற்புத சுகமளித்தாயே போற்றி
ஆரோக்கிய தாயே போற்றி

நீர் செய்த அற்புதங்கள் அகிலமெங்கும் பரவட்டும்
உன் புகழ் எத்திக்கும் பரவட்டும் போற்றி, போற்றி
Kavitha Remi