1. இறைவனுடைய வார்த்தைக்கு பணிந்து நடத்தல்


“இதோ உம் சித்தத்தின் படியே எனக்கு ஆகட்டும் “என்று கடவுளின் வார்த்தைக்கு முற்றிலும் பணிந்து தன்னை கையளித்தார் அன்னை மரியாள்.

2. இறைவனுடைய வார்த்தையை தியானித்தல்்


கடவுளுடைய வார்த்தையை எப்போதும் அன்னை மரியாள், மனதில் இருத்தி தியானித்துக் கொண்டிருப்பதாக விவிலியம் சொல்கின்றது.

3. இறைவார்த்தையின் படி நடத்தல்


அன்னை மரியாளும் இறைவார்த்தையின் படி நடந்து, கானாவூர் திருமணத்தில் பணியாளர்களிடம் சொல்கிறார் “அவர் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று” நம்மையும் இயேசுவின் வழி நடக்க அழைக்கிறார்

4. விசுவாசம்


உலகம் தோன்றியது முதல் அதுவரை நடந்திராத ஒரு கன்னி கருத்தாங்கி பிறப்பதை , கடவுளின் வார்த்தையை முன்னிட்டு அவர் விசுவசித்தார்

5. பிறரன்பு்


எலிசெபத்தம்மாளுக்கு உதவி செய்வதற்காக தாம் தாய்மையடைந்திருந்த போதிலும் கூட மூன்று நாடுகளைக் கடந்து ஏறக்குறைய மூன்று மாதம் தங்கி எலிசெபத்தம்மாளுக்கு அவர் பணிவிடை செய்தார்.

6. இயேசுவின் பாடுகளில் அவர் பங்கேற்றல்்


இதோ உம் உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவும் என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப இயேசுவின் உடலில் ஏற்பட்ட அத்தனை வேதனைகளையும் மரியாள் தன் உள்ளத்தில் தாங்கி , இயேசுவின் சிலுவை மரணம் கடைசி வரை பின் சென்றார்.

7. ஜெப வாழ்வு்


சீடர்களோடு ஒரே மனதாக ஜெபத்தில் ஈடுபட்டு பரிசுத்த ஆவியில் நிலைத்திருந்ததாக விவிலியம் சொல்கிறது.

8. தாழ்ச்சி


தன்னைக் குறித்து தாழ்நிலை நின்ற அடிமை என்று அன்னை மரியாள் குறிப்பிட்டாள். அருள் நிறைந்தவளே வாழ்க ! ஆண்டவர் உம்முடனே என்று வானவர் வாழ்த்தியதைக் கேட்டு மரியாள் , தான் அதற்கு தகுதியற்றவள் என்று கலங்குவது , அவரது தாழ்ச்சியைக் குறிக்கிறது.

9. கீழ்படிதல்


தனக்கென வாழாமல் , தன் கணவருக்கு கீழ்ப்படிந்து தான் பெற்றெடுத்த யேசுவுக்கும் தன்னை அர்ப்பணித்து ஒரு மகத்தான தியாக வாழ்வு வாழ்ந்தவர் அன்னை மரியாள்.

10. எளிய வாழ்க்கை
அன்னை மரியாள் வாழ்ந்த வாழ்க்கை மிக எளிய வாழ்க்கை . ஒரு எளிய தச்சனின் மனைவியாக மனமகிழ்வுடன் அவர் வாழ்ந்தார்