நம் ஆண்டவராம் இயேசுவை,
உதவி கேட்டு கரங்கள் உயர்த்தினோம்
தக்க வேளயில், தகுந்த உதவி கிட்ட செய்து
நம் கிண்ணம் நிரம்ப செய்தார்.
நல்லாயன் நம் இயேசு, திக்கற்ற தம் மக்களை
என்றுமே கைவிடாத உன்னதர்,
இருதயத்தின் வாஞ்சயை, அக்கறையுடன்
பூர்த்தி செய்யும் பரிசுத்தர்.
மலைகளை பிளக்கும்
சக்தியையும், திடமான மனத்தையும்
அருளி அவரே எங்கள் ,
துணையும், ஒளியுமானார்.
பாலைவன வெய்யிலில்,
துவன்ட நம் நெஞ்சங்களுக்கு,
திரளான நீர் பரப்பை காட்டி
தூதர்களை துனையாக அனுப்பி
நிழலுக்கு அழைத்து சென்றார்.
புத்தொளி காட்டி, புது தெம்பளித்து
இறை மக்கள் ஒரு குடும்பமாய்
இறைப்பணி ஆற்றும்
கடமையை கட்டளையிட்டார்.
இறைவா,
நாங்கள் முழு மனதுடனும், முழு விசுவாசத்துடனும்
உம் பணியை தொடர நிறைவாய் ஆசீர்வதியும்.